புதன், 24 மார்ச், 2010

மோசடி பாஸ்போர்ட் விவகாரம்- இஸ்ரேல் தூதரக அதிகாரியை வெளியேற்றியது இங்கிலாந்து


ஹமாஸ் தலைவர் படுகொலை வழக்கில், போலி பாஸ்போர்ட் தயாரித்தது தொடர்பான சர்ச்சையில் இஸ்ரேல் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. 
கடந்த ஜனவரி மாதம் ஹமாஸ் தலைவர் துபாயில் ஹோட்டலி்ல் வைத்துக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் என்று துபாய் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டவர்களின் பாஸ்போர்ட்களை திரித்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் கொலையாளிகள் துபாய் சென்றதும் தெரிய வந்தது. இந்த செயலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறுகையில், இங்கிலாந்து அரசின் விசாரணையாளர்கள் நடத்தி வந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. மோசடிச் செயல்களை செய்தது ஒரு பாதுகாப்பு ஏஜென்சி என்று தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என்றார். இங்கிலாந்து அரசின் உத்தரவுக்கு இஸ்ரேல் தூதர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக