வெள்ளி, 26 மார்ச், 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி சாட்சியம்!


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அத்வானி மற்றும் சங் பரிவாரைச் சேர்ந்த தலைவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கு ரேபரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.


பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க அத்வானி உள்ளிட்டோர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அவர் தனது முந்தைய சாட்சியத்தில் கூறியிருந்தார். அந்த சாட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை என இன்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது ரா உளவு அமைப்பில் அஞ்சு குப்தா பணியாற்றி வருகிறார்.

0 comments:

கருத்துரையிடுக