இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output (MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.
0 comments:
கருத்துரையிடுக