திங்கள், 12 ஏப்ரல், 2010

ஏப். 14 முதல் 17 வரை துபாயில் கல்விக் கண்காட்சி

துபாயில் ஜிடெக்ஸ் கல்விக் கண்காட்சி ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது. துபாய் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்சிபிஷன் மையத்தில் இது நடைபெறுகிறது.
இக்க‌ண்காட்சி ஏப்ர‌ல் 14 ம‌ற்றும் 15 ஆகிய‌ தேதிக‌ளில் காலை 10 ம‌ணி முத‌ல் ம‌திய‌ம் 2 ம‌ணி வ‌ரையும், மாலை 5 ம‌ணி முத‌ல் இரவு 9 ம‌ணி வ‌ரையும் ந‌டைபெறும். ஏப்ர‌ல் 16 ம‌ற்றும் 17 ஆகிய‌ தேதிக‌ளில் ம‌திய‌ம் 3 ம‌ணி முத‌ல் இர‌வு 9 ம‌ணி வ‌ரையும் ந‌டைபெறும்.
இக்க‌ண்காட்சியில் சென்னை அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், பார‌தி வித்யாபீத் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ராஞ்சி பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னால‌ஜி, பிருந்தாவ‌ன் க‌ல்விக் குழும‌ம், த‌த்தா மாகே இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்க‌ல் ச‌ய‌ன்ஸ், இந்திரா காந்தி திற‌ந்த‌வெளி ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ஹிந்துஸ்தான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ஜே.எஸ்.எஸ். ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌துரை காம‌ராஜ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌ஹாத்மா காந்தி ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌ணிபால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், முஹ‌ம்ம‌து ச‌த‌க் குழும‌ நிறுவ‌ன‌ங்க‌ள், சிக்கிம் ம‌ணிபால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு இந்திய‌ க‌ல‌வி நிறுவ‌ன‌ங்க‌ள், அமீர‌க‌ம், க‌ன‌டா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா, லெப‌னான், ஸ்விட்ச‌ர்லாந்து, பிரான்ஸ், எகிப்து, ம‌லேசியா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்கின்ற‌ன‌.


0 comments:

கருத்துரையிடுக