சனி, 24 ஏப்ரல், 2010
முஸ்லீம் தொழிலதிபர்கள் மாநாடு நடத்துகிறார் பாரக் ஒபாமா
முஸ்லீம் நாடுகளுக்கும், அமெரிக்கா வுக்கும் இடையிலான மேலும் வலுப்படுத்துவேன் என்று அதிபராக பதவியேற்றபோது அளித்த உறுதிமொழிக்கேற்ப நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிபர் ஒபாமா, முஸ்லீம் சிறுதொழிலதிபர்கள் மாநாட்டை அடுத்த வாரம் அமெரிக்காவில் நடத்துகிறார்.
50 நாடுகளைச் சேர்ந்த சிறு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், முதலீட்டளாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர். 2 நாள் மாநாடாக இது வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக உலகளாவிய சிறு தொழில் முதலீடுகளை வலுப்படுத்துவது திகழ்கிறது.
இதன் மூலம் முஸ்லீம் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என்றார்.
கடந்த ஜூன் மாதம் கெய்ரோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும், முஸ்லீம் நாடுகளுக்கும் இடையிலான கெளரவத்தையும், மரியாதையையும் அதிகரிக்க ஆர்வமாக உள்ளேன். இரு தரப்புக்கும் இடையிலான கூட்டுப் பங்களிப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றார்.
தற்போது நடைபெறவுள்ள சிறுதொழிலதிபர்கள் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லாரி சம்மர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கினறனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தட்ஸ் தமிழ்
0 comments:
கருத்துரையிடுக