புதன், 7 ஏப்ரல், 2010

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. புதன்கிழமை காலையில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 7.7 ரிக்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் இது திரும்ப்ப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி காலை 5.15 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். பூகம்பத்தின் மையம் சுமத்ராவின் சிபோல்கா பகுதியிலிருந்து 205 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இருந்த்து. கடலுக்கு அடியில் 46 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் நிகழ்ந்த்தாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. முதலில் பூகம்பத்தின் அளவு 7.8 ரிக்டராக கணக்கிடப்பட்டது. பின்னர் இது 7.7 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது. பூகம்பத்தைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையைப் பிறப்பித்தது. இருப்பினும் 2 மணி நேரம் கழித்து அது திரும்பப் பெறப்பட்டது.


0 comments:

கருத்துரையிடுக