ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் நிகாப் முகத்திரை அணியத் தடை

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப் உடையை தடை விதிக்கும்மசோதாவை கனடாவின் க்யூபெக் மாகாண அரசு நிறை வேற்றியுள்ளது. என்பதுடன் விசாரணை ஒன்றில் பேரில் கைதான எந்த ஒரு பெண்னும் முகத்திரையை நீக்க மறுத்தால் அப் பெண்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று கனடா பல்வேறு மாகாணங்களின் போலீஸ் கூறியுள்ளது என்பதுடன் க்யூபெக் மாகாண அரசு முகத்திரை அணியும் பெண்களுக்கு அரச சேவைகள் மற்றும் தனியார் துறை தொழில் போன்றவற்றை பெற்று கொள்ள தடை செய்யும் சட்டம் ஒன்றையும் சட்டமாக அமுல் படுத்த தீர்மானித்துள்ளது. பாலின பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகவும், இரு பாலாருக்கும் சமநிலையை உறுதிபடுத்தும் நோக்கத்துடனும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கனடா கூறியுள்ளது . இந்த சட்டத்தின் படி, சுகாதாரம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சேவைகளை பெறுவதற்கும், வழங்குவதற்கும் வரும் மக்கள் முகத்தை மறைப்பது போன்ற எந்த வித அங்கிகளையும் அணிய முடியாது
அதேவேளை பிரான்ஸில் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப்பை தடை செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது அதை மேலும் விரிவா அணைத்து பொது இடங்களிலும் அமுல் படுத்தும் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பிரான்ஸில் நடை பெறுவதாக பிரான்ஸ் அரச நிர்வாக துறை அறிவித்துள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோழி பிரான்ஸில் முழுமையாக முகத்தை மூடும் நிகாப்பை தடை செய்வேன் என்று கூறியிருப்பது குறிபிட தக்கது-President Nicolas Sarkozy vowed to push for a total ban of the full-face veil as it was “contrary to the dignity of women.
நன்றி: ourumma

0 comments:

கருத்துரையிடுக