சனி, 22 மே, 2010

10-ம் வகுப்பு தேர்வு 26-ம் தேதி ரிசல்ட்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 26&ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் கடந்த மார்ச் 23&ல் தொடங்கி ஏப்ரல் 7&ம் தேதி முடிந்தன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9&ம் தேதி முடிந்தன.
பத்தாம் வகுப்பு தேர்வை 6493 பள்ளிகள் மூலம் 8,56,966 மாணவ, மாணவியர் எழுதினர். மெட்ரிக்குலேஷன் தேர்வை 3138 பள்ளிகள் மூலம் 1,30,020 மாணவ மாணவியர் எழுதினர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 41 பள்ளிகள் மூலம் 4492 பேர் எழுதினர். ஓஎஸ்எல்சி தேர்வை 1593 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 2791 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. அதைத் தொடர்ந்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்தன. எல்லாப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 26&ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த 10&ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 26&ம் தேதி புதன்கிழமை காலை வெளியிடப்படும். தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமும் இணைய தளம், எஸ்எம்எஸ், தொலைபேசி மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். 

0 comments:

கருத்துரையிடுக