சனி, 22 மே, 2010

மங்களூரில் ஏர் இந்தியா விமான விபத்து: 158 பேர் பலி.


மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர். விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15 மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது. காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை. பல்வேறு தகவல்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் ஒருவர் பலி
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து 159 பேராக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
90 உடல்கள் மீட்பு
விபத்து நடந்த இடத்தில் தற்போது உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயுள்ளன. இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளும் காணும் பணிகள் நடந்து வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக