புதன், 12 மே, 2010
நாளை மறுநாள் பிளஸ் 2 ரிசல்ட்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (14-ம் தேதி)
காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி
தொடங்கி 22-ம் தேதி முடிந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,233
பள்ளிகளில் இருந்து 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
இவர்கள் தவிர 53,564 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள்
திருத்தும் பணி, மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்.23-ல் முடிவடைந்தது. இந்தப்
பணியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும்போதே
உடனுக்குடன் மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெறப்பட்ட மதிப்பெண்களை வைத்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கின.
எல்லா பணிகளும் முடிவடைந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும்
என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 14-ம் தேதி (நாளை
மறுநாள்) வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வெளியிடப்படும். தேர்வு எழுதியுள்ள
மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால்
அளிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 comments:
கருத்துரையிடுக