புதன், 26 மே, 2010
எஸ்எஸ்எல்சி: 82.56% பேர் தேர்ச்சி-நெல்லை மாணவி முதலிடம்
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜாஸ்மின் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே
முதவு மாணவியாக தேர்ச்சியடைந்துள்ளார்.
மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள்
85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட
மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
495 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தை திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் பிடித்துள்ளார்.
அவர் பெற்றுள்ள
மதிப்பெண்கள்:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் -
100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 98
மொத்தம் - 495
4
பேர் இரண்டாம் இடம்:
கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவி கே.கே. நிவேதிதா, கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன்
மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங்
கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில்
உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் ஆகிய நான்கு பேரும் 494
மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
3வது இடம்
பிடித்த 10 பேர்:
தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள
ஏ.வி.எஸ். மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ரம்யா, பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள்
மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயிலின், பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி
பி.திலகவதி, பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்
பிரதீப்குமார்,
மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்
பி.ஜெயமுருகன்,
மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன்,
நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி
ஜெ.இந்துஜா, கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர்
ஆர்.ராஜ்சூர்யா, ஆரணி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நஸ்ரின்
பாத்திமா, புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
மாணவி ஜி.ரேவதி 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப்
பிடித்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 100க்கு 100 எடுத்தவர்கள்
குறைவு:
கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100
மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது
குறிப்பிடத்தக்கது.
மெட்ரிக் தேர்வு-பவித்ரா முதலிடம்:
மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495
மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள்
பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493
மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக