வியாழன், 27 மே, 2010
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மாவட்டத்தில் 85.65% தேர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.65 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 1.69 சதவிகிதம் குறைவாகும்.
மாவட்டத்தில் மொத்தம் 11,679 மாணவர்கள், 12,105 மாணவிகள் உள்பட மொத்தம் 23,784 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியிருந்தனர்.
இதில் 9,424 மாணவர்கள், 10,946 மாணவிகள் உள்பட மொத்தம் 20,370 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம் 85.65. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 80.69, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 90.43.
100 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள்:
மாவட்டத்தில் இத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 115 பேர் கணிதப் பாடத்திலும், 55 பேர் அறிவியல் பாடத்திலும், 14 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கல்வி மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்:
தக்கலை கல்வி மாவட்டத்தில் 4596 மாணவர்கள், 4549 மாணவிகள் உள்பட மொத்தம் 9145 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.
அவர்களில் 3671 மாணவர்கள், 4139 மாணவிகள் உள்பட மொத்தம் 7810 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 85.40. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 79.87, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 90.99.
குழித்துறை கல்வி மாவட்டத்தில் 3394 மாணவர்கள், 3617 மாணவிகள் உள்பட மொத்தம் 7011 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 2886 மாணவர்கள், 3298 மாணவிகள் உள்பட மொத்தம் 6184 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்- 88.20. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்- 85.03, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 91.18.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3689 மாணவர்கள், 3939 மாணவிகள் உள்பட மொத்தம் 7628 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 2867 மாணவர்கள், 3509 மாணவிகள் உள்பட மொத்தம் 6376 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம்- 83.59.
மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்- 77.72, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 89.08
0 comments:
கருத்துரையிடுக