வியாழன், 13 மே, 2010

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மதிப்பெண்களை குறைக்க தமிழக அரசு முடிவு


பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மதிப்பெண்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்தார். 
தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது: 
பொறியியல் கல்லூரிகளில் சேர பாஸ் மார்க் எடுத்திருந்தாலே போதும் என்று பொறியியல் கல்லூரி தாளாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடந்த ஆண்டு 30,000 க்கும் அதிகமான இடங்கள் காலியாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். 
இதனால் அவர்கள் கேட்டுக்கொண்ட அந்த அளவுக்கு இல்லை என்றாலும் முற்பட்ட வகுப்பினருக்கு - ஓ.சி. 55 சதவீதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - பி.சி.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவின்ருக்கு - எம்.பி.சி. 45 சதவீதம் என மதிப்பெண்களை ஓரளவு குறைக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. 
இருப்பினும் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். நாளை பிளஸ் 2 ரிசல்ட் வந்த பிறகு ஒரு வாரத்தில் இது குறித்த முடிவு அறிவிக்கப்படும். 

0 comments:

கருத்துரையிடுக