வியாழன், 27 மே, 2010
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிகவெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து திற்பரப்பு அருவியில் சீறிப்பாய்ந்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிக உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக