ஞாயிறு, 27 ஜூன், 2010
12 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து.
உள்நாட்டு,
அயல்நாட்டு 12 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 15ஆம்
தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஆள் பற்றாக்குறை காரணமாக ஏர்
இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள
காலி பணியிடங்களை நிரப்பாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்
போவதாக கடந்த மார்ச் மாதம் ஊழியர் சங்கங்கள்
எச்சரித்திருந்தன. இந்நிலையில் தற்போது
ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக உள்நாடு, அயல்நாடு என 12 விமானங்களின்
சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.டெல்லியில் இருந்து காபூலுக்கும்,
சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கும், பெங்களூருவில் இருந்து
சிங்கப்பூருக்கும் செல்லும் விமானங்கள் போன்ற அயல்நாட்டு சேவை
மட்டுமின்றி மும்பையில் இருந்து கோவா செல்லும் உள்நாட்டு
விமானங்களின் சேவையும் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை ஏர் இந்தியா
நிறுவனம் ரத்து செய்துள்ளது.
.jpg)
0 comments:
கருத்துரையிடுக