வெள்ளி, 4 ஜூன், 2010

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம்

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இது நமக்கெல்லாம் பெருமை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சித்தூர் மாவட்டம் கலிகிரி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியா ௨-வது இடத்தை பெற்றுள்ளது. இது நமக்கு பெருமை. சோனியா வழிநடத்துதலின் பேரில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறந்த ஆட்சியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்த ஆட்சியை தொடர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. எவ்வளவு செலவு செய்ய வேண்டுமானாலும் தயார். ஆனால், அரசு நலத்திட்டங்களை கடைசி குடிமகன் வரை கொண்டு செல்பவர்தான் திறமையான அரசியல்வாதி  என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக