சனி, 5 ஜூன், 2010
ஓமன் நாட்டை தாக்கிய 'பெட்'-இந்தியர் உள்பட 2 பேர் பலி.
'பெட்' புயல் ஓமன் நாட்டை தாக்கியதில் இந்தியர் உள்பட 2 பேர்
பலியாயினர்.
அரபிக் கடலில் உருவன 'பெட்' புயல் முதலில் வடக்கு நோக்கி
நகர்ந்து குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை அச்சுறுத்தியது. அங்கு கரையைக் கடக்கும்
என்ற எதிர்பார்க்கப்பட்டது. புயல் குஜராத் அருகே நெருங்கியபோது அங்கு
பயங்கர சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடற்கரை மாவட்டங்களில் தாழ்வான
பகுதிகளில் இருந்து சுமார் 12,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில்
தங்க வைக்கப்பட்டனர். அங்கு பெய்த பலத்த மழைக்கு 8 பேர் உயிரிழந்தனர். இந்
நிலையி்ல் புயல் அங்கிருந்து திசைமாறி மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானின்
கராச்சியை நோக்கி சென்றது. பின்னர் மீண்டும் தென் மேற்காக நகர்ந்து நேற்று ஓமன்
நாட்டைத் தாக்கியது. துறைமுக நகரமான அல்-பாகியில் 120 கி.மீட்டர் வேகத்தில்
மிக பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது.
இதனால் அங்கு எண்ணெய் எடுக்கும்
பணி அடியோடு பாதிக்கப்பட்டது. விளக்கு கம்பங்கள் சரிந்ததில் ஒரு இந்தியர் உள்பட 2
பேர் பலியாயினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய், இயற்கை எரிவாயு
துரப்பன தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம்
கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது பெட் புயல் ஓமனில் வடகிழக்கு கடற்கரை
பகுதிக்கு நகர்ந்துள்ளது. அது இப்போது வலுவடைந்து வருவதாகத்
தெரிவி்க்கப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக