வெள்ளி, 25 ஜூன், 2010
ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெறும் 2 குழந்தைகளுக்கு பன்றிக்காய்ச்சல்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள
பன்றிக்காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகள் பன்றிக்காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக மேலும் 2 பேர் வார்டில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள
பன்றிக்காய்ச்சல் வார்டில் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த முருகன், நாகர்கோவில்
வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வர்கீஸ் என்பவரின் 3 மாத குழந்தை சபரி, நாகர்கோவிலை
அடுத்த பறக்கை காடேற்றியை சேர்ந்த சுரேசின் மகன் சஞ்சய்(பிறந்து 27 நாட்களே ஆன
குழந்தை) அருமனையை சேர்ந்த வினு என்பவரது மகள் வினோதி(5) ஆகியோர் அனுமதிக்கப்பட்டு
இருந்தனர். அவர்களது ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பி
வைக்கப்பட்டது. இந்த நிலையில் 3 மாத குழந்தை சபரிக்கும், வினோதிக்கும் ரத்த, சளி
பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்
மருத்துவக்கல்லூரிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் இருவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது
போன்று நேற்று அருமனையை சேர்ந்த அனந்த கிருஷ்ணன்(16) என்ற வாலிபரும், நேற்று
முன்தினம் இடைகோடை சேர்ந்த பிரதீப்குமார்(18) என்ற வாலிபரும் பன்றிக்காய்ச்சல்
வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 6 பேர் வரை பன்றி காய்ச்சல் வார்டில்
உள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக