புதன், 23 ஜூன், 2010


உலக வங்கி, இந்தியாவுகு நடப்பாண்டு ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக்கான இந்திய தலைவர் ராபர்ட்டோ ஜாஹா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் மொத்த கடனில், 2.6 பில்லியன் டாலர் வட்டி இல்லா கடனாகவும், 6.7 பில்லியன் டாலர், குறைந்த வட்டியுடன் கூடிய நீண்ட கால கடனாகவும் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, இந்தியாவின் வளர்ச்சி தாளாண்மைக்கு (sustain) உதவும்விதமாக மேற்கொள்ளப்படும் ஐந்து புதிய திட்டங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புக்கான தடைகளை களைய உதவும்விதமாக பயன்படுத்தப்படும் என்றும் அதில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக