புதன், 30 ஜூன், 2010
குமரி மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த குழந்தைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேசிய குழந்தைகள் நல குழுமம் ஆண்டு தோறும் வீரதீர செயல்கள் புரிந்த 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய விருது வழங்கி சிறப்பிக்கிறது.
இதன் நோக்கம் இளம் பருவத்தினர் வீரதீர செயல்கள் புரிந்து நாட்டிற்கு சேவை செய்வதை ஊக்குவிப்பதாகும். இந்த விருதுகள் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசும் கொண்டதாகும். மேலும் விருது பெறுபவர்களுக்கு பள்ளி படிப்பு, பொறியியல், மற்றும் மருத்துவம் போன்ற கல்விகளுக்கு மானியமும் கொடுக்கப்படுகிறது.
இவ்வாண்டிற்கான விருதுகள் 1-7-2009ல் இருந்து 30-6-2010 வரை வீரதீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு தகுதியுடைய குழந்தைகள் தாங்கள் புரிந்த வீரதீர செயல்களை 250 வார்த்தைகளில் விவரித்து, பிறந்த நாள் சான்று மற்றும் செய்திகள், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை அல்லது காவல் நிலைய குறிப்பேட்டு நகல்களோடு உரிய படிவத்தில் 30-9-2010க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவங்கள் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மாநில குழந்தைகள் நலக்குழு தலைவர், பொதுச் செயலாளர், மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரில் யாராவது பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக