ஞாயிறு, 6 ஜூன், 2010

மற்றொரு நிவாரண கப்பலை பிடித்து சென்றது இஸ்ரேல்

துருக்கி நாட்டைச் சேர்ந்த சில சரக்கு கப்பல்கள் காசா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை, கடந்த திங்கள் கிழமை ஏற்றிச் சென்றன. அந்த கப்பல்களை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் கடற்படை, தங்கள் துறைமுகத்துக்கு வந்து பொருட்களை இறக்கி சோதனை செய்யம்படி கூறியது. இதற்கு துருக்கி கப்பல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, காசா பகுதியை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். இதனால் இஸ்ரேல் கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் துருக்கி சரக்கு கப்பலில் தரையிறங்கினர். இதையடுத்து அந்த கப்பலில் இருந்தவர்கள், இஸ்ரேல் கமாண்டோக்களை இரும்பு தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் இறந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐ.நா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஹமாஸ் கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பல் செல்லும் தடையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் காசா பகுதிக்கு சென்ற ‘ராசெல் கோரி’ என்ற மற்றொரு நிவாரண கப்பல் நேற்று சென்றது. அதில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் 11 பேரும், கப்பல் ஊழியர்கள் 9 பேரும் இருந்தனர். நூற்றுக்கணக்கான டன் நிவாரண பொருட்களும் கப்பலில் இருந்தது. இந்த கப்பலை காசா எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் வழிமறித்த இஸ்ரேல் கடற்படை, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தங்களின் ஆஸ்தாத் துறைமுகத்துக்கு கொண்டு சென்றது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், ‘‘ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கக்கூடாது. அதற்காகத்தான் இந்த நடவடிக்கை. காசா பகுதியில் ஈரான் துறைமுகம் அமையவும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார். 

0 comments:

கருத்துரையிடுக