வியாழன், 1 ஜூலை, 2010

வருடாந்திர பணவீக்கம் 12.9 சதவீதமாக குறைந்தது.


நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 12.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 16.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜூன் 19ம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.9 சதவீதமாக சரிந்துள்ளது. உருளைக்கிழங்கின் விலையில் 40 சதவீத சரிவும், வெங்காய விலையில் 7 சதவீத சரிவும், கோதுமை, அரிசி ஆகியவற்றின் விலைக் குறைவும் பண வீக்கம் குறைய வழி வகுத்துள்ளன. இருப்பினும் இந்தப் பொருட்களின் சில்லறை விலை குறைவது பருவ மழையின் கையில்தான் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை பருவ மழை சூடு பிடிக்காமல் இருப்பதால் சில்லறை விலையில் குறைவு ஏற்படுவது இப்போதைக்கு நடக்காததாக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக