வெள்ளி, 2 ஜூலை, 2010

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மின் ரயில் பாதை பணி 2011&ல் நிறைவடையும்

திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையேயான மின் ரயில்பாதை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் 2011ல் முடிவடையும் என்று ஹெலன்டேவிட்சன் எம்பி தெரிவித்தார்.
மார்த்தாண்டத்தில் ரூ.3.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய பணிகளை ஹெலன்டேவிட்சன் எம்.பி. ஆய்வு செய்தார். தொடர்ந்து குழித்துறை ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குழித்துறை ரயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு டெண்டர் கொடுக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கும். மேலும் மேற் கூரை 62 மீட்டர் நீட்டிக்க ரூ.72 லட் சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.42 லட்சம் செலவில் பயணிகள் ஓய்வு அறை கட்டப்பட உள்ளது.
ரூ.2 லட்சத்தில் கார்பார் க்கிங் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. திருவனந்தபுரம்&நாகர்கோவில் மின் ரயில் பாதை பணிக்கு ரூ.52 கோடியே 35 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் 2011ல் நிறை வடையும். மேலும் 4 வழிப்பாதை சாலைக்காக நில ஆஜிர்த பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பாதை கடுவாக்குழி, அதங்கோடு, நட்டாலம், பள்ளியாடி, வட்டம் ஆழ்வார்கோவில், தோட்டியோடு, சுங்கான்கடை, அப்டா மார்க்கெட், வழுக்கம்பாறை, பொத்தையடி வழியாக கன்னியாகுமரியை சேரும் வகையில் பணிகள் நடைபெறும். விரைவில் நில ஆர்ஜித பணிகள் முடிக்கப்பட்டு சாலை பணிகள் துவங்கும். தற்போதுள்ள நாகர்கோவில்&திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது குழித்துறை தி.மு.க. நரக செயலாளர் பொன். ஆசைத்தம்பி, மோட்டார் வாகன சங்க செயலாளர் மாகின், விவசாய அணி தேவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் தினகர் மற்றும் பலர் உடனிருந்தனர். 

0 comments:

கருத்துரையிடுக