சனி, 25 செப்டம்பர், 2010

அமெரிக்க ஓரினச்சேர்க்கையாளர்களில் 20 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ்

அமெரிக்க ஓரினச்சேர்க்கையாளர்களில்  20 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோ‌ய் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக எய்ட்ஸ் ஒழிப்பு பிரிவு இயக்குனர் டாக்டர் ஜோனாதன் தெரிவித்து‌ள்ளா‌ர். அமெரிக்காவில் உள்ள 21 பெரிய நகரங்களில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் நடந்த ஆய்வில், சுமார் 8 ஆயிரம் ஓரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அமெரிக்காவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் லெஸ்பியன்களில் ஐந்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. அதாவது, ஓரினச்சேர்க்கையாளர்களில் 20 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் உள்ளது. அவர்களில் 63 சதவீதம் பேர், 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகும் சேர்க்கையில் ஈடுபடுவதில் கறுப்பு இன இளைஞர்கள் முதலிடத்தில் இருப்பதாக எய்ட்ஸ் ஒழிப்பு பிரிவு இயக்குனர் மரு‌த்துவ‌ர் ஜோனாதன் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக