திங்கள், 18 அக்டோபர், 2010

சீன சுரங்கத்தில் வெடிவிபத்து; 21 பேர் பலி

சீனாவில் மீண்டும் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர். சீனாவின் ஹெனான் மாநிலத்தில் ஷூ நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் 239 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்க துளை போட்டனர். அப்போது கடுமையான அழுத்தம் காரணமாக பூமிக்கு கீழே இருந்த கேஸ் வெடித்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 21 தொழிலாளர்கள் பலியானார்கள். உடனே மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்ட 200 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக