வியாழன், 30 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை 3 ஆக பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.

0 comments:

கருத்துரையிடுக