செவ்வாய், 5 அக்டோபர், 2010
வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை நீட்டிப்பு
கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பிக்க சலுகையை அரசு வழங்கியது. இச்சலுகை அக்.4 வரை அனுமதிக்கப்பட்டது. தற்போது இதை அக்.19 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இச்சலுகை பெற விரும்பும் பதிவுதாரர்கள், நீட்டிக்கப்பட்ட நாட்களுக்குள் அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ, பதிவுத் தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
மேற்கண்ட ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள், அதன் பின் பழைய பதிவுமூப்பு இன்றி, புதிதாக பதிவு செய்திருந்தாலும் கூட, அவர்களும் இச்சலுகைப்படி பழைய பதிவு மூப்பிலேயே தொடரும் வகையில் பதிவை புதுப்பிக்கலாம், என உதவி இயக்குனர் கே.பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தமிழ் சிகரம்
0 comments:
கருத்துரையிடுக