திங்கள், 18 அக்டோபர், 2010

ஆக்கிரமித்த பகுதிகளை இஸ்ரேல் விட்டுத் தந்தால் தீர்வு: பாலஸ்தீன அதிபர்

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய ஆசியப் போரில் கைப்பற்றிய பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் விட்டுத்தந்தால் நிரந்தரந்தரத் தீர்வு காணத் தயார் என்று பாலஸ்தீன அதிபர் மெஹம்மது அப்பாஸ் கூறியுள்ளார். 1967ஆம் ஆண்டு நடந்த போரில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, காஜா, ஜெருசலம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் என்ற நாடு அமைக்கப்பட்ட முழுப் பகுதியும் பாலஸ்தீனமே என்ற கோரிக்கையுடன் பாலஸ்தீனர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான வரலாற்றுப்பூர்வமான பகுதிகளின் மீதான தங்களது நீண்ட காலக் கோரிக்கையை விட்டுத்தரத் தயார் என்று இஸ்ரேல் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியுள்ள பாலஸ்தீன அதிபர் மெஹம்மது அப்பாஸ், இஸ்ரேல் தனது விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு, அது 67 போரில் கைப்பற்றிய காஜா, மேற்குக் கரை, ஜெருசலம் ஆகிய பகுதிகளை விட்டு வெளியேறினால், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்றங்களை அதிகரித்துவரும் நிலையில், தீர்வுத் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமில்லை என்று அப்பாஸ் கூறியுள்ளார்.
வெப்துனியா

0 comments:

கருத்துரையிடுக