ஞாயிறு, 7 நவம்பர், 2010

இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு உதவியாக உள்ளது - ஒபாமா

இந்தியா ஒரு வளரும் நாடு அல்ல, ஒரு வளர்ந்த நாடு என்றும், இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் உதவும் வகையில் உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பையில் இன்று செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்களுடன் உரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  மேலும், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவு அளவுகடந்தது. இது 21ஆம் நூற்றாண்டில் மேலும் வலுவடைந்து வருகிறது. நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க உள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும், உணவு பாதுகாப்பில் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவ முடியும் என்றும் ஒபாமா கூறினார். 
தீவிரவாதம் ஒரு சவாலான விஷயமாக உள்ளது. எனவே, தீவிரவாதத்தை நாம் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூ‌றிய ஒபாமா, அனை‌த்து மதமு‌ம் அமைதியையே போதிக்கின்றன எ‌ன்றா‌ர்.

0 comments:

கருத்துரையிடுக