செவ்வாய், 14 டிசம்பர், 2010

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளது.

அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சன்னி மத்திய வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளது. அகில இந்திய முஸ்லீம் சட்டவாரியத்தின் செயற் குழு உறுப்பினர் லியாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜிலானி ஆகியோர் மூலம் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், ஏறக்குறைய ஒன்பது மனுக்களை இது தொடர்பாக தாக்கல் செய்யலாம் என்றாலும், தற்போதைக்கு ஒரே ஒரு மனுவை மட்டும் தாக்கல் செய்யப்போவதாக லியாஸ் மேலும் கூறியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக