புதன், 22 டிசம்பர், 2010
பாகிஸ்தானில் இருந்து 30 லாரி வெங்காயம் பஞ்சாப் வந்தது.
வெங்காயம் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட கிடு, கிடு விலை உயர்வை அடுத்து பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை வாங்கி “வாகா” எல்லை வழியாக லாரிகளில் பஞ்சாப்புக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வரை 11 லாரிகளில் வெங்காயம் வந்தது. அதன் பிறகு நேற்று இரவு வரை மேலும் 19 லாரிகளில் வெங்காயம் வந்துள்ளது. இதுவரை 30 லாரி வெங்காயங்கள் வந்துள்ளன. அவை பஞ்சாப் மாநில தேவைக்கும் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் வியாபாரிகள் மொத்தம் 1000 டன் வெங்காயத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு லாரியில் 10 டன் வெங்காயம் கொண்டு வரப் படுகிறது. இதன்படி 300 டன் இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்னும் 700 டன் வெங்காயத்தை 70 லாரிகள் மூலம் கொண்டு வர உள்ளனர். அவை இன்னும் 1 வாரத்தில் வந்து சேர்ந்து விடும் என்று வியாபாரிகள் கூறினார்கள். பாகிஸ்தான் வெங்காயம் வருவதாலும், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாலும் வெங்காயம் விலை குறைந்து வருகிறது. டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 30 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் விலை குறைந்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக