புதன், 22 டிசம்பர், 2010

4 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்; “எய்ட்ஸ்” பாதித்த சிறுமி வீட்டை விட்டு விரட்டியடிப்பு.

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த 4 வயது சிறுமி ரேவா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).  இவளது தாயாரை எய்ட்ஸ் நோய் தாக்கி இருந்தது. இதில் உடல்நிலை மோசமான அவர் 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  தாய் மூலம் ரேவாவையும் எய்ட்ஸ் தாக்கி இருந்தது. இதனால் அவளது குடும்பத்தினர் யாரும் அவளை கவனிக்கவில்லை. அவள் அருகே சென்றால் தங்களையும் எய்ட்ஸ் தாக்கி விடும் என பயந்து ஒதுங்கினார்கள்.  சில நாட்கள் கழித்து ரேவாவை வீட்டை விட்டே விரட்டியடித்தனர். இதனால் ரேவா தெருவில் படுத்து இருக்கும் நாய் மற்றும் ஆடு-மாடுகளுடன் சென்று படுத்து கொண்டார். அந்த நாய்களுக்கு வைக்கப்படும் உணவையே அவரும் சாப்பிட்டாள். 
இந்த தகவல் சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரியவந்தது. மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்.  அவர்கள் ரேவாவை மீட்டனர். போதிய உணவு சாப்பிடாமல் ரேவா 8 கிலோ எடை மட்டுமே இருந்தார். 4 வயது குழந்தைகள் சராசரியாக 14 கிலோ எடை இருக்கும். மெலிந்து பரிதாபமாக இருந்த அவளை தற்போது தற்காலிக பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். 
அசாம் மாநிலத்தில் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை பராமரிக்க மையங்கள் ஏதும் இல்லை. எனவே மையம் அமைக்கப்படும் வரை தற்காலிக மையத்திலேயே தங்க வைக்க உள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக