வெள்ளி, 31 டிசம்பர், 2010

'பெனாசிர் கொலை சதித் திட்டம் இராணுவ அதிகாரி வீட்டில் தீட்டப்பட்டது'.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலை சதித்திட்டம் பாகிஸ்தான் இராணுவ படைத் தலைவர் ஒருவரது வீட்டில் வைத்து தீட்டப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளத. 2007 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவத்தில், பாகிஸ்தான் இராணுவ படைத் தலைவர் ஒருவர் உள்ளிட்ட 9 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், படைத் தலைவரது வீட்டில் வைத்துதான் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் புதிதாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் 'த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' என்ற பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே சமயம் அந்த படைத் தலைவர் இன்னமும் இராணுவத்தில் பணியாற்றி வருகிறாரா அல்லது முன்னாள் அதிகாரியா என்பது குறித்து அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 
     இதனிடையே இந்த செய்தி குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இது முற்றிலும் கற்பனையான செய்தி என்று மறுத்தார்.

0 comments:

கருத்துரையிடுக