வெள்ளி, 31 டிசம்பர், 2010

குவைத் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்க அனுமதி.

குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் தாடி வளர்க்கலாம் என அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. குவைத் நாட்டின் ராணுவத்தில் ஆண்கள் தாடி வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ராணுவ வீரர்கள் தாடி வளர்ப்பது மீதான தடையை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். கடந்த ஜூன் மாதம் தாடி வளர்க்க அனுமதிக்கும் நகல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதிருந்தே இதற்குப் பரவலான ஆதரவு இருந்தது தெரிய வந்தது. எனினும் அடுத்த 30 நாள்களில் இந்தத் தீர்மானத்தை அரசு நிராகரிக்கவும் குவைத் நாட்டு சட்டத்தில் இடமிருக்கிறது.
குவைத் வரலாற்றில் அதன் நாடாளுமன்றத்துக்கு முதல்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களில் மூன்று பெண் உறுப்பினர்கள் இந்த தாடி மசோதாவை ஆதரித்து வாக்களித்தார்கள். நான்காவது உறுப்பினர், நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக