புதன், 29 டிசம்பர், 2010

புதிய சட்டம் - ஆசிட் வீசினால் ஆயுள் சிறை


புதுடெல்லி,டிச.29:பெண்களின் உடலில் ஆசிட்டை வீசி(திராவகம்) காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் ஆவனச்செய்யும் சட்டம் இயற்றப்படவிருக்கிறது. மத்திய செயலாளர்கள் கமிட்டி இதுத்தொடர்பாக சிபாரிசுகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அமைச்சரவை அனுமதியளித்தால் சட்டம் அமுலுக்கு வரும். ஆசிட் வீச்சை இந்திய தண்டனைச் சட்டத்தின் சிறப்பு குற்றச்செயலாக மாற்றி தற்போதைய சட்டத்தை திருத்தம் செய்வதற்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கெ.பிள்ளையின் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி சிபாரிசுச் செய்துள்ளது.
குற்றம் புரிந்தோருக்கு 10 வருடம் முதல் ஆயுள்தண்டனை வரை விதிக்க புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவின் முன்வரைவில் சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம், இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்யவேண்டும் என கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இவற்றை திருத்தம் செய்ய தேசிய மகளிர் கமிஷனும், சில அரசு சாரா அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. இந்திய தண்டனைச் சட்டத்தில் இரண்டு புதிய பிரிவுகள் சேர்க்கவும் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக