சனி, 1 ஜனவரி, 2011
தமிழகம் முழுவதும் 3ம் தேதி அமல் தபால் நிலையங்கள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி.
தமிழகம் முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தபால் நிலையம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி சென்னையில் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் 3ம் தேதி முதல் அமல்படுத்து தபால்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய தபால் நிலையங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுமார் 20 தபால் நிலையங்களில் வரும் 3ம் தேதி முதல் மின் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கிழக்கு தபால் கோட்டத்தில் 17 தபால் நிலையங்களிலும், சூரமங்கலம் மேற்கு கோட்டத்தில் 7 தபால் நிலையங்களிலும் இவ்வசதி தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுந்தரராஜ் கூறியதாவது: மின் வாரிய அலு வலகங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தபால் நிலையங்களில் மின் கட்டணத்தை செலுத் தும் வசதி கொண்டு வந்துள்ளோம். சேலம் மாவட்டத்தில், சேலம் தலைமை தபால்நிலையம், அழகாபுரம், அம்மாபேட்டை, தாசநாய்க்கன்பட்டி, பேர்லேண்ட்ஸ், குகை, அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், இரும்பாலை, அரிசிபாளையம், மோகன்நகர், சிவதாபுரம் உள்ளிட்ட 24 தபால் நிலையங்களில் 3ம் தேதி முதல் மின் கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு சுந்தரராஜ் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக