திங்கள், 10 ஜனவரி, 2011
ஈரானில் விமான விபத்து: 77 பேர் பலி.
ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள உர்மியா நகரில் நேற்றிரவு ஈரான் ஏர் போயிங் 727 ரக விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 105 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 77 பேர் பலியானதாக தகவவல் தெரியவந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. 50 பேர் உயிர் தப்பியுள்ளதாக உறுதிச் செய்யப்படாத செய்தி கூறுகிறது. டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட இவ்விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7.45 மணிக்கு விபத்துக்குள்ளானது. விமானம் பல துண்டுகளாக உடைந்த பொழுதும் வெடித்து சிதறவில்லை என ஈரான் ரெட்க்ரஸண்ட் அதிகாரி முஹம்மத் முஸஃபர் தெரிவித்தார். காலநிலையும், கனத்த பனிப்பொழிவும் மீட்புப் பணியை பாதித்துள்ளன.
0 comments:
கருத்துரையிடுக