சனி, 8 ஜனவரி, 2011
ஹஜ் பயணம் செய்வோருக்கு சர்வதேச பாஸ்போர்ட் அவசியம் அரசு அறிவிப்பு.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்தில், சர்வதேச பாஸ்போர்ட் வைத்துள்ள புனித பயணிகள் மட்டுமே ஹஜ் 2011க்கு விண்ணப்பிக்க முடியும் என மும்பை, இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஹஜ் 2011க்காக விண்ணப்பிக்கும்போது புனித பயணி ஒவ்வொருவரும் அவசியம் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். புனித பயணம் மேற்கொள்வோர் தங்களிடம் தற்போது பாஸ்போர்ட் இல்லையென்றால், ஹஜ் 2011க்காக பயணத்திற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே பன்னாட்டுக் கடவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே குலுக்கல் நடைபெறும் சமயத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக