திங்கள், 14 பிப்ரவரி, 2011
ஓமன் கடற்பகுதியில் 10 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் கடத்தல்
மாலத்தீவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அதில் 10 இந்திய மாலுமிகள், 10 ஈரானியர்கள் என மொத்தம் 23 பேர் இருந்தனர். இக்கப்பல் ஓமன் கடற் பதியில் சென்றது. அப்போது அக்கப்பலை சோமாலியா கடற் கொள்ளையர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதை கடத்தி சென்றனர். இத்தகவலை ஐரோப்பிய யூனியன் கப்பற்படை தெரிவித்துள்ளது. கப்பல் கடத்தப்பட்டதை தொடர்ந்து கப்பலுடன் ஆன தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது ஓமனின் மாசிரா கடல் பகுதியில் கடத்தப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக