செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பிளஸ் 2 செய்முறைத்தேர்வு வரும் 3-ம் தேதி துவங்குகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு வரும் 3-ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்வுகளை சுமார் 4.5. லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்கி 25-ம் தேதி நிறைவடைகிறது. இதை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான செயல்முறை தேர்வு மாநிலம் முழுவதும் வரும் 3-ம் தேதி துவங்குகிறது.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் செயல்முறை தேர்வு துவங்கினாலும் முடியும் நாட்கள் மாவட்டம் வாரியாக வேறுபடும். இந்த ஆண்டுக்கான தேர்வுகளை வரும் 3-ம் தேதி துவங்கி 22-ம் தேதிக்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தேர்வுகளி்ல் மொத்தம் நாலரை லட்சம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 9-ம் தேதி வரை, 10- தேதி முதல் 15-ம் தேதி வரை என 2 கட்டங்களாக செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

0 comments:

கருத்துரையிடுக