புதன், 2 பிப்ரவரி, 2011
கொடிகட்டி பறக்குது குழந்தை விற்பனை `5 ஆயிரம் கொடுத்தால் உடனே ரெடி.
டெல்லியில் குழந்தைகள் விற்பனையில் பல பெண்கள் தரகர்கள் போல செயல்படுகின்றனர். டெல்லி கல்யாண்புரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இதுபோன்று குழந்தைகள் விற்பனை ஜரூராக நடக்கிறதாம். இதுபற்றி தகவல் தெரியவந்ததும் பத்திரி கையாளர் ஒருவர் குழந்தை தத்தெடுக்க செல்பவர் போல சென்றுள்ளார். அங்கு லட்சுமி என்ற வேலைக்கார பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்துள்ளனர்.
அவர்களிடம் சென்று ‘எனது சகோதரருக்கு குழந்தை இல்லை. ஒரு குழந்தை வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதற்கு லட்சுமி, ‘குழந்தை ஸ்டாக் இல்லை. ரெடி செய்துவிட்டு கூறுகிறேன்’ என்று கூறினார். சொன்ன நாளில் பெண் நிருபருடன் சென்றார் பத்திரிகையாளர். 2 வயது பெண் குழந்தையை கொடுத்துவிட்டு ரூ.5 ஆயிரம் கேட்டார் லட்சுமி. அந்த குழந்தையின் பெற்றோர் பற்றி கேட்டபோது, ‘அவர்களுக்கு 6 பெண் குழந்தைகள். அதனால் கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டனர்’ என்றார் லட்சுமி.
‘பெண் குழந்தை என்றதால்தான் கம்மி ரேட். ஆண் குழந்தை என்றால் 50 ஆயிரம் வரை விற்கிறேன்’ என்றும் சொல்லியிருக்கிறார் லட்சுமி. டெல்லியில் பல இடங்களிலும் குழந்தைகள் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. நிறைய குழந்தைகள் காணாமலும் போயிருக்கின்றன. அவை கடத்தப்பட்டதா, வெளிநாட்டினருக்கு விற்கப்பட்டதா என்பது தெரியவில்லை என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
0 comments:
கருத்துரையிடுக