வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

8 ஆண்டு போரில் சேதம்: அமெரிக்காவிடம் ரூ 4500 கோடி நஷ்டஈடு கேட்கும் ஈராக்


ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம்உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர்.  தற்கொலை தாக்குதல்கள், வெடிகுண்டு சம்பவங்கள் போன்றவை அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அழகிய நகரமான பாக்தாத்தில் ஏராளமான கட்டிடங்கள், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன. 
மேலும் பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. அடிக்கடி நடைபெறும் வன்முறை சம்பவங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே அமெரிக்க அரசு பாக்தாத் நகர நிர்வாகத்துக்கு ரூ. 4500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பாக்தாத் நகர இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக