ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு: பக்ரைனில் போராட்டம் வலுக்கிறது; ராணுவ நடவடிக்கை வாபஸ்
பக்ரைனில் போராட்டம் வலுத்ததை தொடர்ந்து ராணுவ நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. பக்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க போலீசாரும்,ராணுவம் பயன் படுத்தப்பட்டன. அவர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இறந்தவர்களின் பிணங்களுடன் சிட்ரா கிராமத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தை மனாமா நகரின் பியர்ஸ் சதுக்கத்துக்கு வரவிடாமல் தடுக்க கூட்டத்தினரின் மீது ஹெலிகாப்டரில் பறந்த படியே துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இச்சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னர் ஹாமத்துடன் டெலி போனில் பேசினார். அப்போது, நாட்டில் ஒரு ஆக்க பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மன்னர் ஹமாத் முன் வந்தார். அதற்காக தனது மகனும், ராணுவ துணை தலைமை தளபதியுமான சல்மான் பி¢ன்,ஹமாத் அல்கலிபாவை நியமித்தார். பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.
அவரது அழைப்பை போராட்டக்காரர்கள்¢ நிராகரித்து விட்டனர். தெருக்களில் ராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தெரிவித்தனர். இதனால் பக்ரைனில் போராட்டம் வலுவடைந்துள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம் கள் அதிகமாக உள்ள மனாமாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பியர்ல் சதுக்கத்தில் கூடியுள்ள அவர்கள் தங்கள் கைகளில் பக்ரைன் கொடிகளையும், பூக்களையும் ஏந்தியபடி மன்னர் ஹமாத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டம் வலுவடைந்துள்ளதை தொடர்ந்து மனாமாவில் உள்ள பியர்ல் சதுக்கத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ராணுவம் வாபல் பெறப்பட்டது. மேலும் ராணுவ டாங்கிகளும் திரும்ப பெறப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக