ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
லிபியா மீது தடை, கடாபி சொத்துக்கள் முடக்கம்: அமெரிக்கா அறிவிப்பு!
லிபியா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். மேலும், லிபிய அதிபர் மொம்மர் கடாபி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் அமெரிக்காவில் சொந்தமாக உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கருவூலத் துறை இதுகுறித்து கூறுகையில், ' மொம்மர் கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு அமெரிக்காவில் சொந்தமாக உள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவின் உத்தரவின் பேரிலேயே இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன', என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லிபியா மீது ஒருமுகமான தடைகளை விதிப்பதாக ஒபாமா நேற்று அறிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானதாக லிபியாவின் உள்நாட்டுச் சூழலும் கலவரமும் அமைந்திருப்பதால் இந்தத் தடையை விதித்துள்ளதாக ஒபாமா அறிவித்துள்ளார்.
மேலும் லிபியாவிலுள்ள அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றிக் கொண்டிருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தட்ஸ்தமிழ்

0 comments:
கருத்துரையிடுக