திங்கள், 21 பிப்ரவரி, 2011

குழந்தைகள் பாலியல் கொடுமையை தடுக்க விரைவில் புதிய சட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரை மூலமாக, மத்திய அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக கொண்டுவரப்படும் இந்த புதிய சட்டம், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து பாலியல் கொடுமைகளையும் உள்ளடக்கியதாக மற்றும் கடுமையான தண்டனை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதில் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது. 
இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்பான இதர சட்டத்தை விட இப்புதிய சட்டத்தின் கீழே வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக