வெள்ளி, 11 மார்ச், 2011
சீனாவில் திடீர் நிலநடுக்கம்: 13 பேர் பலி
சீனாவில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்திற்கு 13 பேர் பலியானார்கள். சீனாவின் தென்மேற்கே மியான்மர் எல்லை அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,
ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 13 பேர் உயிரிழந்ததாகவும், 125 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 10 கிலோமீட்டர் ஆழத்தில் யுன்னானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக