வெள்ளி, 11 மார்ச், 2011
அமெரிக்காவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த 21 கிறிஸ்தவ பாதிரியார்கள் சஸ்பெண்ட்.
அமெரிக்காவில் ஃபிடெடெல்பியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்த 21 கிறிஸ்தவ பாதிரியார்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிறுவர்களை வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக கடந்த மாதம் வெளியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஃபிடெடெல்பியாவில் ஆர்ச் பிஷப் கர்தினால் ஜஸ்டின் ரிகாலி, 21 பாதிரியார்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். 37 பாதிரியார்கள் குற்றவாளிகள் என விசாரணை கமிட்டி கண்டறிந்தது.
அறிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு பிறகு மூன்று பாதிரியார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
0 comments:
கருத்துரையிடுக