புதன், 9 மார்ச், 2011
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் ஹோன் ஷீ தீவு உள்ளது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் அங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் அலறி யடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழும்பின. சுமார் 50 செ.மீட்டர் உயரத்துக்கு அவை உயர்ந்து வந்ததால் மக்கள் கலக்கம் அடைந்தனர். உடனே பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
ராட்சத அலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஹோன் ஷீ பசிபிக்கடற்கரை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சுனாமி அலைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ வரை எதிரொலித்தது. அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். சிங்கன்சன் பகுதியில் ஓடும் புல்லட் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நில நடுக்கத்தில் அமோரி, மியாஜி மற்றும் புருஷிமா ஆகிய இடங்களில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. மேலும் சேத விவரங்கள், உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
0 comments:
கருத்துரையிடுக