ஞாயிறு, 13 மார்ச், 2011
ஜப்பானில் கதிர்வீச்சு அபாயம்
பூகம்பத்தால் வெளிப்பட்ட அதிகமான வெப்பத்தால், ஜப்பானின் அணுஉலைகள் வெப்பம் அடைந்துள்ளன. பியூகுஷிமா டைச்சி பகுதியின் அணுஉலை உட்பட 5 முக்கிய மின் உற்பத்திக்கான அணுஉலைகளில் பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு கசிவு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதை முதலில் ஜப்பான் பிரதமர் நவ்டோ கான் மறுத்தார். அணு உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளித்தார். எனினும், தொடரும் நிலநடுக்கங்களால் அணு உலைகள் பாதிக்கப்படலாம் என்பதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டன. அந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலையில் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள பியூகுஷிமா டைச்சி அணு மின் நிலையத்தில் வெப்பம் தாங்காமல் அணுவை பிளப்பதற்கான கருவி வெடித்தது. அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பியூகுஷிமா அணுமின் நிலையத்தை சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கு ஆபத்து என்பதால் 45,000 பேர் உடனடி யாக வீடுகளை காலி செய்து வெளியேற
0 comments:
கருத்துரையிடுக