திங்கள், 14 மார்ச், 2011
ஜப்பானில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்
சுனாமி பாதித்த ஜப்பானில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகளும் தொடர்ந்து நீடித்து வருவதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக